வைரல்

’நாங்க நினைத்தால்..’ : குரூப் அட்மின்களுக்கு மட்டும் புதிய வசதியை தரும் Whatsapp அப்டேட்!

தற்போது வாட்ஸ் ஆப்-களில் போலி செய்தியை பரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் குரூப் அட்மின்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

’நாங்க நினைத்தால்..’ : குரூப் அட்மின்களுக்கு மட்டும் புதிய வசதியை தரும் Whatsapp அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப். இந்த செயலியானது தற்போது 'Meta' வசம் சென்ற பிறகு அடிக்கடி பல்வேறு அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது.

அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது DP என்று சொல்லப்படுகிற வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)-ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.

’நாங்க நினைத்தால்..’ : குரூப் அட்மின்களுக்கு மட்டும் புதிய வசதியை தரும் Whatsapp அப்டேட்!

மேலும் புதிய வாட்ஸ் அப் குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் Privacy கட்டுப்பாட்டு வசதியை வழங்கியுள்ளது meta நிறுவனம். அதுமட்டுமல்லாது தற்போது வாட்ஸ் ஆப்-களில் போலி செய்தியை பரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் குரூப் அட்மின்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

அதாவது போலி செய்தி, அவதூறு ஆபாசப்பேச்சு வீடியோ போன்றவற்றை தவிர்க்கும் நோக்கில், குரூப் அட்மின்களுக்கான Delete messages for everyone என்கிற அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை தனிப்பட்ட நபர்கள் மட்டுமே Delete for everyone என்ற அம்சம் இருக்கும். ஆனால் தற்போது குரூப் அட்மின்களுக்கான Delete messages for everyone என்கிற அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது. விரைவில் அனைத்து அட்மின்களுக்கும் இது கிடைக்கும் எனக் கூறப்படுள்ளது.

banner

Related Stories

Related Stories