வைரல்

அரிய வகை பக்கவாத நோய்.. முகத்தின் ஒருபகுதி முடக்கம் - ஜஸ்டின் பெய்பர் வெளியிட்ட வீடியோ!

அரிய வகை பக்கவாத நோயால் தனது முகத்தின் ஒருபகுதி செயலிழக்க ஆரம்பித்துள்ளதாக ஜஸ்டின் பெய்பர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அரிய வகை பக்கவாத நோய்..  முகத்தின் ஒருபகுதி முடக்கம் - ஜஸ்டின் பெய்பர் வெளியிட்ட வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜஸ்டின் பெய்பர். பிரபல பாப் பாடகரான இவர் யூடியூப் வழியாக தனது பயணத்தை தொடங்கி இன்று உலகில் பாப் பாடல்கள் பாடும் முக்கிய நபர்களில் ஜஸ்டின் பெய்பர் ஒருவர் என்ற அளவில் உயர்ந்திருக்கிறார்.

சமீபகாலமாக அவ்வபோது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் ஜஸ்டின் பெய்பர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நிலை மோசமான ஆனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரிய வகை பக்கவாத நோயால் தனது முகத்தின் ஒருபகுதி செயலிழக்க ஆரம்பித்துள்ளதாக ஜஸ்டின் பெய்பர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ஜஸ்டின் பெய்பர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அடுத்தடுத்து நான் எனது நிகழ்ச்சியை ரத்து செய்வதால், ரசிகர்கள் சோகத்தில் இருப்பது என புரிந்துக்கொள்ள முடிகிறது.

என் உடல்நிலைக் காரணமாக இசைக் கச்சேரி நடத்த முடியாத சூழலில் உள்ளேன். மிகவும் சோர்வாக உணர்கின்றேன். நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளக்து. என்னால் முகத்தின் வலது பக்கத்தை இயக்க முடியவில்லை. ஒருபக்கம் முகம் செயலிழந்து முடங்கியுள்ளது.

இதற்காக சிகிச்சை பெற்று வருகின்றேன். நான் இதில் இருந்து குணமடைவேனா என்பது குறுத்து எனக்குத் தெரியவில்லை. எனவே முழுமையாக குணமடைய நிச்சயம் ஓய்வு தேவை. எனவே இனிவரும் நாட்களில் இசை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ஓய்வு எடுக்கவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories