வைரல்

’போய் வாடா என் பொலி காட்டு ராசா’.. Santro கார் தயாரிப்பை மீண்டும் நிறுத்திய Hyundai !

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான சான்ட்ரோவின் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது.

’போய் வாடா என் பொலி காட்டு ராசா’.. Santro கார் தயாரிப்பை மீண்டும் நிறுத்திய Hyundai !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுபுதுக் கார்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏன் எலான் மஸ்க் கூட மின்சார கார்களை அறிமுகம் செய்து கார்கள் யுகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இப்படி புதிய புதிய கார்கள் வந்து கொண்டே இருந்தாலும், பழைய வாகனங்களுக்கான மவுசு குறைத்தான் செய்யும்.

இதனால் பழைய மாடல் கார்களை பல நிறுவனங்கள் தயாரிப்பதை நிறுத்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரிப்பான சான்ட்ரோ காரும் இடம் பிடித்துள்ளது. 1998ம் ஆண்டு தனது முதல் சான்ட்ரோ தயாரிப்பை அறிமுகம் செய்தது ஹூண்டாய். இதையடுத்து சான்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு பிடித்த கார் ஆனது.

குறிப்பாக உயரம் அதிகமானவர்களுக்குப் பிடிக்கக் காரணம் அதன் வடிவமைப்புதான். சான்ட்ரோ ரூ. 2.99 லட்சத்திலேயே கிடைத்தால் விற்பனையில் சக்கைபோடு போட்டது. பின்னர் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கார்கள் வெளிவந்ததால் அவற்றுக்கு சான்ட்ரோவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் தனது தயாரிப்பை 2015ம் ஆண்டு நிறுத்தியது ஹூண்டாய்.

இதையடுத்து, பிறகு 4 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட சான்ட்ரோ காரை அறிமுகம் செய்தது ஹூண்டாய். இருந்தாலும் இது வாடிக்கையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. ரூ. 4.90 முதல் 6.25 லட்சம் வரை விலை இருந்தது.

இந்த விலையில் சான்ட்ரோ காரைவிட சொகுசான கார்கள் இருந்ததால். சான்ட்ரோவால் போட்டிப் போடமுடியவில்லை. இந்நிலையில் சான்ட்ரோ தயாரிப்பை மீண்டும் நிறுத்துகிறது ஹூண்டாய். தனது கார் விற்பனை பட்டியலில் இருந்துசான்ட்ரோ காரை நீக்கியுள்ளது. இதையடுத்து சான்ட்ரோ காரின் ரசிகர்கள் ’போய் வாடா என் பொலி காட்டு ராசா' அதற்குப் பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories