வைரல்

கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகத்தில் கார் மோதியதில் ஒருவர் பலி - மூவர் படுகாயம் : பதைபதைக்கும் CCTV காட்சி!

கர்நாடகாவில் வேகமாக சென்ற கார் மோதியதில் ஒருவர் பலியானர் 3 பேர் காயமடைந்தனர். கார் விபத்தை ஏற்படுத்தும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகத்தில் கார் மோதியதில் ஒருவர் பலி - மூவர் படுகாயம் : பதைபதைக்கும் CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகா மாநிலம் பானசங்கரி அருகே கதிரிகுப்பே சந்திப்பு அருகே வேகமாக சென்ற கார் மோதியதில் ஒருவர் பலியானார் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காட்சிகள் அங்குள்ள ஒரு சி.சி.டி.வி பதிவாகியுள்ளது.

அதில், சுரேஷ் என்ற நபர் சாலையோரம் நடந்து செல்கிறார். அவர் பின்னால் மூன்று நபர்கள் நடந்து செல்கின்றனர். அப்போது அந்த வழியே வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சுரேஷ் மீது மோதியதில் அவர் அருகில் உள்ள இரு சக்கர வாகனங்கள் மீது தூக்கி வீசப்படுகிறது.

மேலும் அவரை பின் தொடர்ந்து நடந்து வந்த 3 நபர்கள் மீதும் அந்த கார் மோதி அருகில் இருந்த மற்றொரு காரின் மீது மோதி நிற்கிறது. பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர் படுகாயமடைந்த சுரேஷை காப்பாற்றுமாறு அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கிறார்.

இந்த சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பானசங்கரி போலிஸார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் முகேஷ் என்பவரை கைது செய்தனர். இதனிடையே விபத்தில் காயமடைந்த நான்கு பேரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையி,ல் படுகாயமடைந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories