வைரல்

இப்படிலாமா செய்வீங்க? - ‘Mango Maggi’யை கண்டு தெறித்து ஓடும் நெட்டிசன்ஸ்.. வைரல் வீடியோவின் பின்னணி ?

சாலையோரம் உணவகம் ஒன்றில் மாம்பழ ஜீஸில் மேஜி சமைப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படிலாமா செய்வீங்க? - ‘Mango Maggi’யை கண்டு தெறித்து ஓடும் நெட்டிசன்ஸ்.. வைரல் வீடியோவின் பின்னணி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணும் இன்ஸ்டண்ட் நூலுல்ஸ் பிராண்டான மேகியை, தற்போது பானிபூரி மேகி, மேகி தோசை என்று பல விதமாக விற்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தநிலையில் சாலையோரம் உணவகம் நடத்தும் பெண் ஒருவர், மேகியோடு, மாம்பழ ஜீஸை சேர்த்து புதுவிதமான உணவை சமைத்து வருகிறார். பின்பு சமைத்து முடித்த பின்பு அதில் சில மாம்பழ துண்டுகளையும் போட்டு விற்பனை செய்கிறார். இந்த வீடியோவை “ தி கிரேட் இந்தியான் ஃபுடி” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் மட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாது நெட்டிசன்களால் பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இது போன்றவற்றை இதுவரை யாரும் செய்தது இல்லை என்பதால் பலர் இந்த வீடியோவிற்கு வெறுப்படைந்துள்ளனர்.

மேலும் சிலர், இப்படி சமைத்தால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள் என்றும், பலர் கடவுளே எனக்கு வேறொர கிரகத்தைக் கண்டுபிடித்துக் கொடு என்றும் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவைத் தவிர, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் உடனடி நூடுல் பிராண்ட் மிகவும் பிரபலமாகவும், அதிகமாக உட்கொண்டும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வித்தியாசமான சமையல் சோதனைகள் சில நேரங்களில் பாராட்டப்பட்டாலும், மற்றவை அபத்தமானவையாகவே பார்க்கபப்டுகிறது.

banner

Related Stories

Related Stories