இந்தியா

73 ஆண்டு ஏக்கம் தீருமா? - தாமஸ் கோப்பையை குறிவைக்கும் இந்திய பேட்மிண்டன் அணி..!

இந்தோனேஷியா இந்த தொடரை 14 முறை வென்றிருக்கிறது. வேறெந்த அணியும் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக சரித்திரம் படைக்கும் முனைப்போடு இறங்கும் இந்திய அணி சாதிக்குமா?

73 ஆண்டு ஏக்கம் தீருமா? - தாமஸ் கோப்பையை குறிவைக்கும் இந்திய பேட்மிண்டன் அணி..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தாய்லாந்தில் பேட்மிண்டனின் மிக முக்கிய தொடர்களில் ஒன்றான தாமஸ் கோப்பை தொடர் நடந்து வந்தது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இறுதிப்போட்டியில் இன்று இந்திய அணியும் இந்தோனேஷிய அணியும் மோதவிருக்கின்றன.

1949 முதல் நடந்து வரும் தாமஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை இவ்வளவு சிறப்பாக ஆடியதே இல்லை. 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கிறது. இந்த போட்டியை வென்று இத்தனை ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய அணியின் எண்ணமாக இருக்கிறது.

கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென், பிரனாய், சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி, அர்ஜூன்-துருவ் கபிலா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கின்றனர். முதல் மூவரும் ஒற்றையருக்கான போட்டிகளில் ஆடுபவர்கள். அடுத்த நால்வரும் இணையாக இரட்டையர்களுக்கான போட்டியில் ஆடுபவர்கள்.

73 ஆண்டு ஏக்கம் தீருமா? - தாமஸ் கோப்பையை குறிவைக்கும் இந்திய பேட்மிண்டன் அணி..!

ஒற்றையர்களுக்கு மூன்று போட்டியும் இரட்டையர்களுக்கு இரண்டு போட்டியும் என மொத்தமாக 5 போட்டிகள் நடைபெறும். இந்த 5 போட்டிகளில் எந்த அணி அதிக போட்டிகளை வெல்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள்.

நாக் அவுட்டுக்கு முன்னதாக நடந்த லீக் போட்டிகளில் மூன்றில் இரண்டு போட்டிகளில் வென்று இந்திய அணி வென்றிருந்தது. ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளுக்கு எதிராக 5 ஆட்டங்களையும் வென்று முழுமையாக இரண்டு போட்டியையும் வென்றிருந்தது. சீன தைபேவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியால் இந்த ஆதிக்கத்தை தொடர முடியவில்லை. 2-3 என மூன்று ஆட்டங்களை கோட்டைவிட்டு தோற்றுப்போனது.

முதல் இரண்டு ஆட்டங்களிக் வென்றதால் காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி 3-2 என அட்டகாசமாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் முறையாக தாமஸ் கோப்பை தொடரில் பதக்கத்தை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து அரையிறுதியில் வலுவான் டென்மார்க்கை இந்தியா எதிர்கொண்டது. டென்மார்க் 2016 தாமஸ் கோப்பை தொடரை வென்ற அணி.

73 ஆண்டு ஏக்கம் தீருமா? - தாமஸ் கோப்பையை குறிவைக்கும் இந்திய பேட்மிண்டன் அணி..!

பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் ஆட்டத்திலேயே விக்டர் ஆக்சல்சனிடம் இந்தியாவின் லக்சயா சென் தோற்று போயிருப்பார். தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி நான்கு ஆட்டங்கள் முடியும்போது 2-2 என போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. போட்டியை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரனாயும் ராஸ்மஸூம் மோதியிருந்தனர். இதிலும் முதல் செட்டை பிரனாய் தோற்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்டையும் வென்று திரில்லாக முடித்து இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.

இறுதிப்போட்டியில் இந்திய அணி இன்று இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது. இந்தோனேஷியா இந்த தொடரை 14 முறை வென்றிருக்கிறது. வேறெந்த அணியும் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக சரித்திரம் படைக்கும் முனைப்போடு இறங்கும் இந்திய அணி சாதிக்குமா?

banner

Related Stories

Related Stories