விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?.. தொடங்கியது KKRvsSRH போட்டி

இன்று IPL போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?.. தொடங்கியது KKRvsSRH போட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போட்டி: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

நேருக்கு நேர்: போட்டிகள்: 22

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி: 14

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி: 8

சிறந்த பேட்டர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் - 12 போட்டிகளில் 336 ரன்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா - 11 போட்டிகளில் 331 ரன்கள்

சிறந்த பௌலர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: உமேஷ் யாதவ் - 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டி.நடராஜன் - 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை:

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 7 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 10 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் (மே 12 நிலவரப்படி) இருக்கிறது. புனேவில் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் கொல்கத்தா தலா 1 வெற்றியும், 1 தோல்வியும் பெற்றிருக்கிறது. நல்ல ரன்ரேட்டோடு அந்த அணி வெற்று பெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடம் வரை முன்னேற முடியும்.

அதேசமயம் கொல்கத்தா இந்தப் போட்டியில் தோற்றால், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 7 போட்டிகளில் தோற்றிருக்கிறது. தொடர்ந்து ஐந்து வெற்றிகள் பெற்றிருந்த அந்த அணி, இப்போது அடுத்தடுத்து 4 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. 10 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் (மே 12 நிலவரப்படி) இருக்கிறது. நல்ல ரன்ரேட் உடன் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி ஐந்தாம் இடம் வரை முன்னேற முடியும். புனேவில் விளையாடியுள்ள 2 போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோற்றிருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?.. தொடங்கியது KKRvsSRH போட்டி

இந்த சீசன் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. நித்திஷ் ராணா 54 ரன்களும், ஆண்ட்ரே ரஸல் 49 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளும், உம்ரன் மாலிக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, 13 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி 71 ரன்கள் எடுத்தார். எய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்காம்ல் 68 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா பௌலர்களில் ஆண்ட்ரே ரஸல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடைசிப் போட்டியில்:

தங்கள் கடைசிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. நித்திஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் இருவரும் தலா 43 ரன்கள் எடுத்தனர். ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா. கொல்கத்தா தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரே ரஸல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் கடைசிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஜெகதீஷா சுசித் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராகுல் திரிபாதி மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 58 ரன்கள் எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?.. தொடங்கியது KKRvsSRH போட்டி

மாற்றங்கள்: கொல்கத்தா வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதனால், அவருக்குப் பதில் சமிகா கருணரத்னே தன் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (C), நித்திஷ் ராணா, ரிங்கு சிங், ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், சமிகா கருணரத்னே, டிம் சௌதி, உமேஷ் யாதவ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (C), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரண் (WK), சஷாங்க் சிங், ஜெகதீசா சுசித், புவ்னேஷ்வர் குமார், உம்ரன் மாலிக், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹக் ஃபரூகி

banner

Related Stories

Related Stories