வைரல்

12,000 அடி உயரம்.. நடுவானில் விமானத்தை மாற்ற முயன்ற விமானிகள்.. விபரீதத்தில் முடிந்த சாகச முயற்சி!

அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனாவைச் சேர்ந்தவர்கள் விமான சாகசம் செய்யும்போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12,000 அடி உயரம்.. நடுவானில் விமானத்தை மாற்ற முயன்ற விமானிகள்.. விபரீதத்தில் முடிந்த சாகச முயற்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் லூக் அய்கின்ஸ் (48), மற்றும் ஆண்டி ஃபிரிங்டன். இவர்கள் அந்நாட்டில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும், flight stunt மற்றும் Skydiving-ல் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர்.

இந்நிலையில் விமானத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்யும் Skydiving மூலம் மற்றொரு விமானத்திற்குச் செல்வது என முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, விமானிகள் இருவரும், இரு விமானங்களில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தங்களது விமானத்தில் இருந்து வெளியே வந்து, விமானங்களை நடுவானில் மாற்றிக்கொள்ள முயற்சி செய்துள்ளனர்.

அதன்படி கடந்த ஏப்ரல் 24 அன்று அந்த சாகத்தை மேற்கொள்ளும்போது, விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்ததால் அவர்களின் சாகச முயற்சி தோல்வியில் முடிந்தது. விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ள நிலையில், அந்த இரு விமானங்களும் கீழே விழுந்து பலத்த தேசமடைந்துள்ளன.

இந்த முயற்சியை அடுத்த முறை செய்து, இந்த சாகச முயற்சியில் வெற்றி பெறுவோம் என இருவரும் பேட்டியளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories