வைரல்

சோகமான சாதனை படைத்த மும்பை.. தல தல என கத்தி கூல் சுரேஷ் மோடுக்கு சென்ற நடிகர் சூரி.. நெட்டிசன்ஸ் ஆரவாரம்!

IPL-ல் 15 சீசனில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு வெற்றியை கூட பெறாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது இதுவே முதல் முறை.

சோகமான சாதனை படைத்த மும்பை.. தல தல என கத்தி கூல் சுரேஷ் மோடுக்கு சென்ற நடிகர் சூரி.. நெட்டிசன்ஸ் ஆரவாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்.,21) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.

முதலில் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களை குவித்திருந்தார்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது சென்னை அணி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த மிட்சலும் ஏமாற்றமளிக்க உத்தப்பா, ராயுடு கூட்டணி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டது.

ராயுடு 40 ரன்களும், உத்தப்பா 30 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வெற்றிபெற 26 பந்துகளில் 50 ரன்கள் தேவை எனும் வேளையில் தோனியும், ப்ரேட்டோரியஸும் இணைந்து மும்பை வீரர்களின் பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டனர்.

இப்படி இருக்கையில், கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி வழக்கம் போல தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6,4,2,4 என சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதன் மூலம் சென்னை அணி, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளனர். இதனிடையே முன்னாள் சாம்பியனான மும்பை அணி நடப்பு தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை தழுவி ப்ளே ஆஃப் வாய்ப்பை முற்றிலும் இழந்தது. IPL-ல் 15 சீசனில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு வெற்றியை கூட பெறாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது இதுவே முதல் முறை.

இதனிடையே சென்னை அணி வென்றதையும், தனக்கே உரிய பாணியில் தோனி பந்துகளை விளாசி எடுத்ததையும் CSK ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள், பிற அணி வீரர்கள் என பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடிகர் சூரியும், தோனி கடைசி ஓவரில் பவுண்டரிகளை அடித்ததை பார்த்து தல தல என துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories