வைரல்

9 மாத கைக்குழந்தையின் கழுத்தை நெரித்து, தூக்கி வீசிய கொடூர தாய்.. குலைநடுங்க வைக்கும் ‘பகீர்’ வீடியோ!

இளம்பெண் ஒருவர் 9 மாத குழந்தையை கொடூரமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 மாத கைக்குழந்தையின் கழுத்தை நெரித்து, தூக்கி வீசிய கொடூர தாய்.. குலைநடுங்க வைக்கும் ‘பகீர்’ வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு மாநிலத்தின் சம்பா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 9 மாத குழந்தையை கொடூரமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் 9 மாத குழந்தையை தனது மடியில் வைத்திருக்கு தாய் ஒருவர், குழந்தை அழுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஆவேசமடைந்து குழந்தையின் கழுத்தை நெரித்து இறுக்கிப் பிடிக்கிறார். பின்னர் குழந்தையின் கன்னத்தில் அறைந்து, படுக்கையில் தூக்கி வீசி எறிகிறார்.

இந்தக் காட்சி காண்போரை நடுங்கச் செய்த நிலையில், குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து போலிஸார் அந்த பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குழந்தை அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories