வைரல்

“சிவப்பு சேலையை கட்டிவைத்து ரயிலை நிறுத்திய மூதாட்டி” : மக்களை காப்பாற்ற மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்!

ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அறிந்து துரித நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது,

“சிவப்பு சேலையை கட்டிவைத்து ரயிலை நிறுத்திய மூதாட்டி” : மக்களை காப்பாற்ற மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் அவாகர் கிராமத்தை சேர்ந்தவர் ஓம்வதி (65). இவர் அருகில் உள்ள வயலுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது, அந்த ஏற்பட்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி ஓம்வதி, இதில் ரயில் வந்தால் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தான் அணிந்திருந்த சிவப்பு சேலையை, மர குச்சிகளில் கட்டி தண்டவாளத்தின் குறுக்கே கட்டி வைத்துவிட்டார் ஓம்வதி.

இதனிடையே இடாவில் இருந்து துண்ட்லாவை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் அங்கு வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் குறுக்கே சிவப்பு துணி இருப்பதைக் கண்டு ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் விரிசல் குறித்து தெரியவந்த பின்னர், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரிசெய்யப்பட்டு ரயில் கிளம்பிச் சென்றது. இதுதொடர்பாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories