வைரல்

Viral Video : ”பாகுபலி பிரபாஸ் பாணியில் ஒய்யாரமாக யானை மீது ஏறிய முதியவர்” - அசந்துபோன நெட்டிசன்கள்!

Viral Video : ”பாகுபலி பிரபாஸ் பாணியில் ஒய்யாரமாக யானை மீது ஏறிய முதியவர்” - அசந்துபோன நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் ராஜமவுலியின் பிரமாண்ட ஹிட் படங்களின் ஒன்றான பாகுபலி இரண்டாம் பாகத்தில் யானையின் தும்பிக்கை மீது நாயகன் பிரபாஸ் ஏறிய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

திரைப்படத்துக்காக கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

ஆனால் எந்த கிராஃபிக்ஸும், எவர் துணையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக யானையின் தும்பிக்கை வழியாக அதன் மீது முதியவரான பாகன் ஒருவர் ஒய்யாரமாக ஏறி அமரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அது தொடர்பான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான திபான்ஷு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாகுபலி 2ல் வரும் பிரபாஸை போல செய்திருக்கிறார் என பிரபாஸ் மற்றும் ராஜமவுலியையும் டேக் செய்திருக்கிறார். இதுவரையில் 34 ஆயிரத்துக்கும் மேலானோர் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories