வைரல்

“தமிழின் பெருமைகளை காட்சிப்படுத்திய உலகின் மிக உயர்ந்த கட்டிடம்” : சர்ப்ரைஸ் கொடுத்த துபாய் தமிழர்கள் !

துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

“தமிழின் பெருமைகளை காட்சிப்படுத்திய உலகின் மிக உயர்ந்த கட்டிடம்” : சர்ப்ரைஸ் கொடுத்த துபாய் தமிழர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை - துபாய் உலக கண்காட்சியின் இந்திய அரங்கில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், மார்ச் 24, 2022 முதல் மார்ச் 28, 2022 வரையிலான 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களுடனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களுடனும் சந்திப்புகள் நடைபெற்றன.

“தமிழின் பெருமைகளை காட்சிப்படுத்திய உலகின் மிக உயர்ந்த கட்டிடம்” : சர்ப்ரைஸ் கொடுத்த துபாய் தமிழர்கள் !
photofahad

உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

இந்த திறப்பு விழாவின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் / துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் மாண்புமிகு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்கள் உடனிருந்தார். மேலும் தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைத்த பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலிஃப் மற்றும் சவுதி அரேபியா அரங்குகளை பார்வையிட்டார்.

அதன்பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு வார விழாவையொட்டி, துபாயில் உள்ள 2,217 அடி உயரம் கொண்ட உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை பார்வையிட்டார். மேலும், இந்த காட்சிகளை பிரமாண்ட திரையில் திரையிட்ட போது குழுமியிருந்த பலரும் ஆர்வத்துடன் அந்த காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்!” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வுகளின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

banner

Related Stories

Related Stories