வைரல்

“தமிழ் பெண்ணை காதலித்து திருமணம்.. இணையத்தில் வைரலாகும் MAXWELL கல்யாண பத்திரிகை” : பின்னணி என்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

“தமிழ் பெண்ணை காதலித்து திருமணம்.. இணையத்தில் வைரலாகும் MAXWELL கல்யாண பத்திரிகை” : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான க்ளென் மேக்ஸ்வெல் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட வினி ராம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்களின் திருமணம் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண பத்திரிகை நேற்று இணையத்தில் வைரலானது.

அவர்களின் கல்யாண பத்திரிக்கை தமிழர்களின் பாரம் பரியப்படி மஞ்சள் பத்திரிக்கையில் அச்சடிக்கப்பட்டதுதான் காரணம். இந்தப் பத்திரிக்கையைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் உடனே மேக்ஸ்வெலுக்கு வாழ்த்து கூறி தம்பதிகளில் கல்யாண பத்திரிக்கையை வைரலாகி வருகின்றனர். மேலும் இருவரும் காதலித்து மணமுடிக்க உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஜோடி, 2013ம் ஆண்டிலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பின்னர் இது காதலாக மலர்ந்துள்ளது. மேக்ஸ்வெல்தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு வினி ராமும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் பெண்ணை காதலித்து திருமணம்.. இணையத்தில் வைரலாகும் MAXWELL கல்யாண பத்திரிகை” : பின்னணி என்ன?

பின்னர், 2020ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கொரோனா பரவியதால் இவர்கள் திருமணம் தள்ளிவந்துள்ளது. இந்நிலையில்தான் மார்ச் 27ம் தேதி இந்த காதல் ஜோடி திருமண வாழ்க்கைக்குச் செல்கிறது.

தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட வினி ராம் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் கிடையாது. இவர் பிறப்பதற்கு முன்பே அவரது பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். இவரது பெற்றோர் ஆஸ்திரேலியா சென்றாலும் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்துள்ளனர். இந்நிலையில்தான் மகளின் திருமணத்திற்கு மஞ்சள் பத்திரிகை அடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories