வைரல்

Oh Noo... Nooo.... சமோசா ஓகே; அது என்ன ஜாமுன் சமோசா? - Foodies-ஐயே முகம் சுழிக்க வைத்த வீடியோ இதோ!

உணவு பிரியர்களின் பிரியப்பட்ட நொறுக்குத் தீனியாக இருக்கும் சமோசா இனிப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்த வைரல் வீடியோ.

Oh Noo... Nooo.... சமோசா ஓகே; அது என்ன ஜாமுன் சமோசா? - Foodies-ஐயே முகம் சுழிக்க வைத்த வீடியோ இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Foodies எனும் உணவு பிரியர்கள் பொதுவாக புது வகையான உணவுப் பண்டங்களை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதிலும் சாலையோர உணவு (Street Foods) என்றால் அவர்களது விருப்பதிற்கு அளவே இருக்காது.

குறிப்பாக சாட் வகை உணவுகள், நொறுக்குத் தீனிகள் என்றால் அலாதி பிரியமாக இருக்கும். அப்படியான சாட் வகையின் முதன்மையாக இருப்பது சமோசா. இந்தியா முழுவதும் சமோசாவை விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை ஏராளம்.

அப்படிப்பட்ட சமோசாவை இனிப்பு வகையில் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அப்படியான நிகழ்வுதான் டெல்லியில் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு அதனைக் காணும் உணவு பிரியர்களையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

அபிஷேக் என்ற Food Blogger ஒருவர்தான் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில், சமோஷாக்குள் உருளைக்கிழங்கு மசாலாக்கு பதில் குலோப் ஜாமுனை வைத்து பொறித்து ஜாமுன் சமோசா என விற்று வருகிறார்கள். அதனையே அபிஷேக் சாப்பிட்டுள்ளார்.

அந்த ஜாமுன் சமோசாவை சாப்பிட்டதும் அவரது முகம் போன போக்கே எல்லா உணவு பிரியர்களின் பாவனையாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த வீடியோ லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டதோடு ஜாமுன் சமோசா காம்பினேஷன் குறித்து சரமாரியாக கமென்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories