வைரல்

தண்டவாளம் & தார்சாலையில் செல்லும் ‘மினி ரயில் பஸ்’ : ஜப்பான் விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு! (PHOTOS)

ரயில் தண்டவாளம் மற்றும் தார்சாலையில் செல்லும் வகையில், “மினி ரயில் பஸ்” பேருந்தை ஜப்பான் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நம் கற்பனைக்கு எட்டாத வகையில் உலகம் முழுவதுமே விஞ்ஞானம் அசுர வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில், டிரைவர் இல்லாமால் தானாக இயங்கும் ரயில்கள், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என பல சாதனைகளை ஆட்டோமொபைல் துறையினர் சாதித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது மின்சாரத்தில் இயக்கும் டூ-விலர் மற்றும் கார், பறக்கும் கார், தண்ணீரில் செல்லும் கார் என பல புதிய தொழில்நுட்பங்களை மேற்கொண்டு, வாகனங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது ரயில் தண்டவாளம் மற்றும் தார்சாலையில் செல்லும் வகையில், “மினி ரயில் பேருந்தை” ஜப்பான் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் டோஷிமா மாகாணத்தில் உள்ள கையோ என்னும் நகரில், DMV (Dual Mode Vehicle) என்ற வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வாகனம், தண்டவாளத்திலும் தார்ச்சாலையிலும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு மினி பஸ் போல தோற்றமளிக்கும் இந்த வாகனத்தில், முன்பக்கம் டயர்களும், தண்டவாளத்தில் செல்லும் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போது பேருந்து போல இயங்க, ரப்பர் டயர் சக்கரத்தையும், தண்டவாளத்தில் இயக்கும்போது இரும்பு சக்கரத்தையும் பயன்படுத்தும். சோதனை ஓட்டம் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கச்சிதமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இந்த வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தண்டவாளம் & தார்சாலையில் செல்லும் ‘மினி ரயில் பஸ்’ : ஜப்பான் விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு! (PHOTOS)

இதைவிட இந்த வாகனத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அது செல்லும் வேகம் தான். முதலாவதாக வாகனத்தின் டயர்கள் மாற்ற எடுத்துக்கொள்ள ஆகும் நேரம் வெறும் 15 விநாடிகள் மட்டுமே. மேலும் ரயில் பாதையில், மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், நெடுஞ்சாலையில் 100 கிமீ வேகத்திலும் செல்லும்படி இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் டிக்கெட் கட்டணம் வழக்கம் போல இருப்பதால் பயணிகளும் அதிக அளவில் பயனித்து வருகின்றனர். ஜப்பானின் கையோ நகரில் மட்டும் உள்ள இந்த வாகனம் வரும் காலங்களில் நாட்டின் முக்கிய இடங்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

banner