வைரல்

6 வயதில் சொந்த வீடு வாங்கிய சிறுமி : தலை சுற்ற வைக்கும் விலை - எப்படி வாங்கினார்..? - ஆச்சர்ய தகவல்!

சொந்தவீட்டை கனவாக கொண்ட 6 வயது சிறுமி ஒருவர் ரூ.3.6 கோடி மதிப்புள்ள கனவு வீட்டை வாங்கி பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

6 வயதில் சொந்த வீடு வாங்கிய சிறுமி : தலை சுற்ற வைக்கும் விலை - எப்படி வாங்கினார்..? - ஆச்சர்ய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதுமே சொந்த வீடுதான் பலரின் கனவாக இருக்கிறது. ஆயுள் முழுவதும் உழைத்தாவது ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் எனச் சுற்றிச் சுழன்று வேலை பார்க்கும் மக்களை நாம் அனுதினமும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில், சொந்த வீட்டை கனவாக கொண்ட 6 வயது சிறுமி ஒருவர் ரூ.3.6 கோடிக்கு தனது கனவு வீட்டை வாங்கி பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் கேம் மெக்லெலன். வீடுகள் விற்றுக்கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு சிறு வயது முதலே சேமிப்பு பழக்கத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார்.

மேலும் தாங்கள் சேமித்து வைக்கும் பணத்தை வைத்து ஒரு சொந்த வீடு வாங்கவேண்டும் என அறிவுறுத்தி, அவர்களின் சேமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வேலைகளை அதிக ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார்.

குறிப்பாக பணம் எளிதாக கிடைக்காது என்பதனை உணர்த்துவற்கு வீட்டில் உள்ள வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தி, அதற்கு ஈடாக தன் மூன்று குழந்தைகளுக்கும் பணம் கொடுத்துள்ளார். தந்தையின் பேச்சைக் கேட்டு வீட்டில் ஏராளமான உதவிகளையும், அவ்வப்போது தந்தைக்கு உதவிகளையும் செய்து மூவரும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம் ரூபாய் பாக்கெட் மணியாக சேகரித்துள்ளனர்.

இந்த தொகையோடு சேர்ந்து வீடு வாங்கத் தேவைப்படும் மீதத் தொகையை செலுத்தி வீடு ஒன்றை தனது மூன்று குழந்தைகளின் பெயரில் வாங்கியுள்ளார். மேலும் தற்போது வாங்கி இருக்கும் இந்த வீடு வரும் ஆண்டுகளில் மதிப்பு உயரும் என்றும் அவர்கள் பெரியவர்களாகும்போது அதன் மொத்த மதிப்பு 10 மடங்காகும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தையும், குறைந்த வயதில் அவர்களுக்கான சொந்த வீட்டையும் வாங்க வைத்த கேம் மெக்லெலனை பலரும் பாராட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories