தமிழ்நாடு

“குழந்தைகளை குறிவைக்கும் ஒமைக்ரான்.. தொற்று பாதிப்பு 4 மடங்கு அதிகரிப்பு” : அச்சத்தில் உலக நாடுகள்!

கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“குழந்தைகளை குறிவைக்கும் ஒமைக்ரான்.. தொற்று பாதிப்பு 4 மடங்கு அதிகரிப்பு” : அச்சத்தில் உலக நாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று 106 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த புதிய தொற்றால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மீண்டும் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது என அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் முன்பை விட கூடுதலாக பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, சுகாதாரத்துறை மாகாண வெளியிட்டு அறிவிப்பில், டிசம்பர் முதல் வாரம் தொடங்கி தற்போதுவரை பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்திருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசிக்கு அனுமதி இல்லாத நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories