வைரல்

”10 லட்சம் கொடுத்தா கல்யாணத்துக்கு ஓகே” - மணமகனை வெளுத்தெடுத்த பெண் வீட்டாரை உறைய வைத்த அதிர்ச்சி தகவல்!

திருமணத்தன்று வரதட்சணை கேட்ட மணமகனை பெண் வீட்டார் அடித்து துவம்சம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

”10 லட்சம் கொடுத்தா கல்யாணத்துக்கு ஓகே” - மணமகனை வெளுத்தெடுத்த பெண் வீட்டாரை உறைய வைத்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள சாஹிபாபாத்தில் நடைபெற இருந்த திருமண விழாவில் மணமகனையும் அவரது குடும்பத்தாரையும் பெண் வீட்டார் தாக்கிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஆக்ராவைச் சேர்ந்த முஜமில் ஹுசைன் என்பவரின் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. அப்போது மணமகனும் அவரது தந்தை 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது பெண் வீட்டாரை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முஜமில் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆனதும் அது தொடர்பான புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மணமகனை அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மணமகள் குடும்பத்தார் போலிஸிடம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக வரதட்சணை கேட்ட மணமகனை பெண் வீட்டார் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories