வைரல்

”வெறும் சோறு மட்டும்தான் கொடுப்பியா?” : திருமணமான நான்கே நாளில் மணமகன் கொதிப்பு; இந்தோனேசியாவில் விநோதம்!

திருமணமான நான்கே நாட்களில் விவாகரத்து செய்வதாக இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

”வெறும் சோறு மட்டும்தான் கொடுப்பியா?” : திருமணமான நான்கே நாளில் மணமகன் கொதிப்பு; இந்தோனேசியாவில் விநோதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணமான சில மாதங்களில், ஆண்டுகளில் விவாகரத்துகள் நடைபெற்று வருவது வாடிக்கையாகியுள்ளது. இப்படி இருக்கையில் இந்தோனேசியா நாட்டில் விநோதமான திருமணத்தை நடத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் நான்கே நாட்களில் அந்த திருமண உறவை முறித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் என்ன விநோதம் இருக்கிறது என கேட்கிறீர்களா? அதுதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் கொய்ருல் அனம் (Khoirul Anam). இந்த இளைஞர் கடந்த வாரம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ வெள்ளையா, அழகா, அமைதியா, அதிகம் பேசாத, நல்லா சமைக்க தெரிஞ்சதா இருக்க. நீ இல்லனா எனக்கு சாப்பாடு கிடைக்காது. என் கனவு” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்.

மனைவியை இவ்வாறு சிலாகிப்பதில் என்ன தவறு என கேட்கலாம். ஆனால் கொய்ருல் மணமுடித்துக் கொண்டது ஒரு ரைஸ் குக்கரை. அவருக்கும் குக்கருக்கும் நடந்த திருமணம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்தே மேற்குறிப்பிட்டபடி பதிவிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் குக்கரை கட்டியணைத்து முத்தமிடுவதுமாக உள்ளது.

இந்நிலையில், உருகி உருகி கேப்ஷன் போட்டு திருமணத்தை வெளிப்படுத்திய கொய்ருல், நான்கே நாட்களில் அந்த குக்கரை விவாகரத்து செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

அது என்னவெனில், அந்த குக்கர் வெறும் சாப்பாடு மட்டுமே சமைத்து தருகிறது. அதனால் விவாகரத்து செய்கிறேன் என கொய்ருல் அறிவித்திருக்கிறார். இந்த போஸ்ட்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories