வைரல்

கடவுளையே தேம்பி அழ வைத்த பிரதமர் மோடி... பா.ஜ.க அரசை விமர்சித்து ஆங்கில நாளேடு கற்பனைக் கதை!

பா.ஜ.க அரசை விமர்சித்து ‘தி நியூ சண்டே எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில் கற்பனை கதை ஒன்று வெளியாகியுள்ளது.

Nikkei Asian Review
Nikkei Asian Review
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடவுள் ஒரு நாள், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் சொன்னார்.

“இந்த பூமிப் பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?” என்று கேட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

“இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அந்த மாதிரியான நிலைமையைப் பெறும்” என்று சொன்னார் கடவுள். அந்த பதிலைக் கேட்டதும், பைடன், “ஐந்து ஆண்டுகளா ? அதைக் காண நான் அதிபராக இருக்க மாட்டேனே!” என்று கதறிக் கண்ணீர்விட்டார்.

அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், “அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் எப்போது அதிவேகமாக வளர்ந்து மெச்சத் தகுந்த நிலையினை அடையும்” என வினவினார். “இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்” என்றார் கடவுள். “இன்னும் 25 ஆண்டுகளா? அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேனே!” என்று அரற்றி அழ ஆரம்பித்துவிட்டார் போரிஸ் ஜான்சன்.

அடுத்து நரேந்திர மோடிக்கான வாய்ப்பு. அவர் நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார். தூய இந்தியில் கடவுளிடம் கேட்டார்; “இந்தியா எல்லோரும் போற்றும் எழிலார்ந்த நாடாக இன்னும் எத்தனை காலம் ஆகும்?” என்று. இதைக் கேட்டதும் கடவுள், தேம்பி அழத் தொடங்கினார். “அதைக் காண நானே இருக்க மாட்டேன்” என்றார் தேம்பிக்கொண்டே கடவுள்!

‘தி நியூ சண்டே எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில், டி.ஜே.எஸ் ஜார்ஜ் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து - பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய நாடு செல்லும் திசை எங்கே போய் முடியப் போகிறது என்பதை இதைவிட அழகாகவும் நாகரிகமாகவும் எழுத இயலாது.

banner

Related Stories

Related Stories