வைரல்

குட்கா மென்ற மணமகனை அடித்த மணமகள்..? : வைரல் வீடியோ உண்மையா?

குட்கா மென்ற மணமகனை, மணமகள் அடித்த வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.

குட்கா மென்ற மணமகனை அடித்த மணமகள்..? : வைரல் வீடியோ உண்மையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமண மேடைகளில் நடைபெறும் சில நிகழ்வுகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படி வடமாநிலம் ஒன்றில் மணக்கோலத்தில் இருந்த மணமகன் குட்கா மென்றதால், மணமகள் அடிப்பதாக ஒரு வீடியோ வைரலானது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மணமகனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ போலியானது என்றும் யூடியூப் சேனல் ஒன்றில் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

சந்தன் மிஷ்ரா என்ற யூடியூப் சேனலில் தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. சந்தன் மிஷ்ரா என்பவர் நகைச்சுவையாக காட்சிகளை எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இப்படி இவர் வெளியிட்ட வீடியோவில்தான் மணமகன் குட்கா மென்றபோது மணமகன் அறைவதாக காட்சி இடம்பெற்றுள்ளது. யாரோ ஒருவர் இந்தப் பகுதியை மட்டும் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் பலரும் நிஜ சம்பவம் என நினைத்து ஷேர் செய்ததால் 2020ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சந்தன் மிஷ்ரா இதேபோன்று பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். வைரல் வீடியோவில் மணமகன், மணமகளாக வருபவர்கள் மற்ற சில வீடியோக்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories