இந்தியா

PUBG விளையாட்டிற்காக ரூ.10 லட்சம் பணத்தை அபேஸ் செய்த சிறுவன் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

பப்ஜி விளையாட்டிற்காகப் பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்தைச் சிறுவன் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PUBG விளையாட்டிற்காக ரூ.10 லட்சம் பணத்தை அபேஸ் செய்த சிறுவன் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த விளையாட்டுகள் பல்வேறு வடிவத்தில் இணையத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில், மும்பையில் சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட்டிற்காகப் பெற்றோர்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 10 லட்சம் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த மாதம் முதல் செல்போனில் பப்ஜி விளையாடி வந்துள்ளார். இந்த விளையாட்டிற்காகச் சிறுவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 10 லட்சத்தை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர், கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சிறுவன் கடிதம் எழுதிவைத்து விட்டு, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலிஸில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் சிறுவனைத் தேடினர். பின்னர் சிறுவன் அந்தேரி கிழக்கு மகாகாளி குகை அருகே இருப்பது தெரியவந்தது. அங்குச் சென்ற போலிஸார் சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனிடம் பப்ஜி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இணையத்தில் இந்த விளையாட்டுகள் தாராளமாகக் கிடைக்கவே செய்கிறது. எனவே சிறுவர்களை அழிக்கும் இப்படியான விளையாட்டை முற்றாக அழிக்க வேண்டும் என தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories