வைரல்

“ஏலத் தோட்ட தொழிலாளி இப்போது உயர்நிலைப்பள்ளி ஆசிரியை”: PhD படிக்கும் சாதனைச் செல்வி செல்வமாரியின் கதை!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தோட்ட தொழிலாளியாக இருந்த செல்வமாரி படித்து பட்டம் பெற்று ஆசிரியராகப் பணி ஏற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஏலத் தோட்ட தொழிலாளி இப்போது உயர்நிலைப்பள்ளி ஆசிரியை”: PhD படிக்கும் சாதனைச் செல்வி செல்வமாரியின் கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதாகும் செல்வமாரி. இவர் தற்போது வஞ்சிவாயல் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். சரி ஆசிரியர் தானே இதில் என்ன சாதனை எனக் கேள்வி எழலாம். இந்த நிலையை அடைவதற்கு ஆசிரியர் செல்வமாரி, பல ஆண்டுகால போராட்டங்களைச் சந்தித்துள்ளார்.

குறிப்பாக தன்னுடைய குழந்தைப் பருவத்தில், விடுமுறை நாட்களில் தனது தாயுடன் சேர்ந்து ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்குச் சென்று வந்துள்ளார் செல்வமாரி. மின்வசதி இல்லாத வீடு என்பதால் தினமும் நள்ளிரவு வரை எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்த மாணவிதான் செல்வமாரி.

மேலும் பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் செல்வமாரி கடந்து வந்துள்ளார்.செல்வமாரி குழந்தையாக இருக்கும்போதே, தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளோடு குடும்பத்தை கைவிட்டுள்ளார் அவரது தந்தை.

“ஏலத் தோட்ட தொழிலாளி இப்போது உயர்நிலைப்பள்ளி ஆசிரியை”: PhD படிக்கும் சாதனைச் செல்வி செல்வமாரியின் கதை!

கடுமையான வறுமை கொண்ட குடும்ப சூழலிலும், தனது படிப்பை விடாமல் பள்ளிப்படிப்பை முரிக்காடி பள்ளியிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு கல்வியை தமிழ்நாட்டிலும் படித்தார். பின்னர் நல்ல மதிப்பெண்களுடன் திருவனந்தபுரம் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றார்.

ஆனாலும், மலையாளத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ சரளமாகப் பேசமுடியாத சூழலில் இந்த மொழிகளை எப்படியேனும் கற்றுக்கொள்ளவேண்டும் எனத் தீர்மானித்து குறுகிய காலத்திலேயே மலையாளம், ஆங்கிலத்தை சரளமாகப் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார்.

பின்னர் பட்டப் படப்பை முடித்துவிட்டு, குமுளி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்து பி.எட் தேர்ச்சி பெற்றார். அதனைத்தொடர்ந்து எம்.எட் மற்றும் எம்.ஃபில் படிப்புகளில் முதல் ரேங்க் எடுத்து சாதித்துள்ளார். அதோடு நின்றுவிடாமல் தற்போது கணிதத்தில் அவர் பி.எச்டி ஆராய்ச்சிப் படிப்பையும் மேற்கொண்டு வருகிரார். மேலும் யு.ஜி.சி நெட் தேர்வையும் அவர் முடித்துள்ளார்.

சிவில் சேவையில் தொடரவேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய கனவு, அதற்காக கடுமையாக உழைப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அவரது இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories