வைரல்

‘ஊரடங்கு காலத்தில் இந்த நடிகை செய்யும் வேலையைப் பாருங்க...’ : இணையத்தில் பரவும் வீடியோ!

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை செய்துள்ள வேலை குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

‘ஊரடங்கு  காலத்தில்  இந்த நடிகை செய்யும் வேலையைப் பாருங்க...’ : இணையத்தில் பரவும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த ஆண்டு வெளியான 'தும்பா' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும் வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல. சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories