வைரல்

மிருகத்தனமாக மூதாட்டியை இழுத்த செயின் பறித்த கொள்ளையன் - புழலில் பயங்கரம் (வீடியோ)

புழலில் மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே அச்சமடைய வைத்துள்ளது.

மிருகத்தனமாக மூதாட்டியை இழுத்த செயின் பறித்த கொள்ளையன் -  புழலில் பயங்கரம் (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புழல் அருகே மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை இரு சக்கரவாகனத்தில் வந்த மர்மநபர் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புழலை அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்த லட்சுமிபாய் என்ற மூதாட்டி, வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், கடையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியின் பின்புறம் சென்று கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்திருக்கிறார்.

பின்னர், தயாராக வைத்திருந்த பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார் அந்த மர்ம நபர். இதற்கிடையில், செயினை பறித்தப் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி லட்சுமிபாய் பலத்த காயத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தங்கச்சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புழல் போலிஸார் அந்த ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் , பட்டப்பகலில் மூதாட்டியை நிலைக்குலைய வைத்து செயினை பறித்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories