வைரல்

டிஜிட்டல் ATM வசதியை அறிமுகப்படுத்திய PhonePe : இனிமேல் இப்படியும் பணம் எடுக்க முடியும் !

வங்கி ATMல் இருந்து பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக டிஜிட்டல் ஏ.டி.எம் வசதியை அறிமுகம் செய்துள்ளது PhonePe நிறுவனம்.

டிஜிட்டல் ATM வசதியை அறிமுகப்படுத்திய PhonePe : இனிமேல் இப்படியும் பணம் எடுக்க முடியும் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் டிஜிட்டல் வாலட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது PhonePe.

முதன் முதலில் இந்தியாவில் டிஜிட்டல் ஏ.டி.எம் சேவையை PhonePe நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டெல்லி என்.சி.ஆரில் சோதனை ஓட்டம் முறையில் செயல்படுத்தப்படும் இந்த டிஜிட்டல் ஏ.டி.எம் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு, தங்களது வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை என்றால் PhonePeபரிவர்த்தனையை பயன்படுத்துவோர் டிஜிட்டல் ஏ.டி.எம் சேவையை பெறலாம்.

டிஜிட்டல் ATM வசதியை அறிமுகப்படுத்திய PhonePe : இனிமேல் இப்படியும் பணம் எடுக்க முடியும் !

எப்படியெனில், ATM சென்று பணம் பெற முடியாதவர்கள், PhonePe செயலி மூலம் அருகே உள்ள வணிகரிடம் சென்று, PhonePe மூலம் அந்த வணிகருக்கு பணம் செலுத்திவிட்டால் போதும். அவர் கையில் பணமாக கொடுத்துவிடுவார். இதற்கென எந்த சேவை கட்டணமும் கிடையாது.

மேலும், அதிகபட்ச அளவு என இந்த டிஜிட்டல் ஏ.டி.எம் சேவைக்கு நிர்ணயம் செய்யவில்லை. ஆனால், சோதனை ஓட்டம் என்பதால், தற்போது டெல்லி என்.சி.ஆரில் ரூ.1000 வரை இந்த சேவையின் மூலம் பயன்பெறலாம் என PhonePe நிறுவனம் தெரிவித்துள்ளது.

PhonePe இந்த அறிவிப்பு மூலம், இதர ஆன்லைன் வாலட்களான கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம் கூடிய விரைவில் இது போன்றதொரு அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories