வைரல்

”1 கோடி ரூபாயில் என்ன செய்வேன் தெரியுமா?” - கோடீஸ்வரி கவுசல்யாவின் ஆசை : வைரல் வீடியோ!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்தும் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கோடி ரூபாயை வென்ற கவுசல்யா, தனது பரிசுத்தொகையை பயன்படுத்தப்போவதாகக் கூறிய விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”1 கோடி ரூபாயில் என்ன செய்வேன் தெரியுமா?” - கோடீஸ்வரி கவுசல்யாவின் ஆசை : வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் நகைச்சுவை, ஆடல், பாடல் கொண்டாட்டங்களாக மக்களிடம் சென்றடைந்தாலும் சில நிகழ்ச்சிகளில் மனதை உருகவைக்கும் வகையிலான சம்பவங்களும் நிகழும். அது சமூக வலைதளங்களையும் ஆக்கிரமிக்கும்.

அந்த வகையில், தனியார் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் சேனலில் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில், காண்போர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான தருணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

”1 கோடி ரூபாயில் என்ன செய்வேன் தெரியுமா?” - கோடீஸ்வரி கவுசல்யாவின் ஆசை : வைரல் வீடியோ!

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கவுசல்யா, கோடீஸ்வரி கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அறிவுத் திறனை இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அதற்கான பரிசாக அவருக்குக் கிடைத்திருப்பது ஒரு கோடி ரூபாய். தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு கோடி பரிசுத்தொகையை வென்ற பெண் என்ற பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியவராகியுள்ளார் கவுசல்யா.

”1 கோடி ரூபாயில் என்ன செய்வேன் தெரியுமா?” - கோடீஸ்வரி கவுசல்யாவின் ஆசை : வைரல் வீடியோ!

மதுரையைச் சேர்ந்த கவுசல்யா நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது ஆசை எனக் கூறிய கவுசல்யா, போட்டியில் தான் வென்ற பரிசுத்தொகையை நாகர்கோவிலில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக வழங்க இருப்பதாகக் கூறியுள்ளார். இது அரங்கில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு கோடி வெல்வதற்கான கேள்விக்கு கவுசல்யா பதிலளித்த வீடியோவை கலர்ஸ் தமிழ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கியதோடு கவுசல்யாவுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியை நடிகர் ராதிகா தொகுத்து வழங்கி வருகிறார்.

banner

Related Stories

Related Stories