வைரல்

பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து - ஆசை தீர பரிமாறி மகிழ்ந்த சத்துணவு பணியாளர்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலைவாழை இலைப்போட்டு விருந்து வைத்த சத்துணவு பணியாளருக்கு குவியும் பாராட்டுகள்.

பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து - ஆசை தீர பரிமாறி மகிழ்ந்த சத்துணவு பணியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழை இலை பிரியாணி போட்டு நெகிழ வைத்துள்ளார் சத்துணவு பணியாளர்.

அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார் பாரிச பேகம்.

பள்ளியில் படிக்கும் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு தினந்தோறும் சாப்பாடு சமைத்து வழங்கும் பாரிச பேகத்திற்கு, குழந்தைகளுக்கு ஒரு நாளாவது விருந்து சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

அதனை நினைவாக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தன்னுடைய சொந்த செலவில் மட்டன் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு அக்கிராம மக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories