வைரல்

''பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்'' - நடத்துனரின் பேச்சுக்கு குவியும் பாராட்டு! (VIDEO)

நடத்துனர் ஒருவர் பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள் என பயணிகளிடம் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

''பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்'' - நடத்துனரின் பேச்சுக்கு குவியும் பாராட்டு! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடத்துனர் ஒருவர், தமிழக அரசு நமக்கு புதிய பேருந்தை கொடுத்துள்ளார்கள். இந்தப் பேருந்தை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் உதவவேண்டும்.

யாருக்கேனும் வாந்தி வருவது போன்று இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பேருந்தை நிறுத்தச் சொல்கிறேன், அல்லது புளிப்பு மிட்டாய் தருகிறேன்.

உங்களது பயணம் சிறப்பாக அமைய தமிழ்நாடு போக்குவரத்து சார்பாகவும் ஓட்டுநர் சதாசிவம், நடத்துநர் சிவசண்முகம் சார்பாகவும் வாழ்த்துக்கள்'' எனக் கூறியுள்ளார்.

பேருந்து ஓட்டுநரின் செயலுக்கு தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது நீண்ட தூரம் செல்லும் அணைத்து பேருந்துகளிலும் செயல்படுத்த வேண்டும் எனவும், நடத்துனருக்கு தமிழக அரசு விருது கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories