வைரல்

’உங்ககிட்ட இருந்துதான் கற்றுக்கொண்டேன்..’ : இது கங்குலியின் மகள் போட்ட Instagram செல்ல சண்டை !

சமூக வலைதளத்தில் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலியும் அவரது மகளும் இன்ஸ்டாகிராமில் பேசிய உரையாடல் பதிவு வைரலாகியுள்ளது

’உங்ககிட்ட இருந்துதான் கற்றுக்கொண்டேன்..’ : இது கங்குலியின் மகள் போட்ட Instagram செல்ல சண்டை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பி.சி.சி.ஐ தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முதன் முதலில் பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்தி ஹாட்ரிக் ஹிட் போன்று சாதித்துள்ளார் ரசிகர்களின் DADA சவுரவ் கங்குலி.

டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, தனது இன்ஸ்டாகிராமில் ஈடன் கார்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் கங்குலி. அதில், கங்குலியின் மகள் சனாகான் "நீங்கள் விரும்பாததுதான் எது?" என கமென்ட்டில் கேள்வி எழுப்பியிருந்தார்.

’உங்ககிட்ட இருந்துதான் கற்றுக்கொண்டேன்..’ : இது கங்குலியின் மகள் போட்ட Instagram செல்ல சண்டை !

அதற்கு "நீ சொல்பேச்சு கேட்டு நடக்காமல் இருப்பது" என செல்லமான கண்டிப்புடன் பதிலளித்தார் கங்குலி. உடனே சனா கானும், "அது உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது" என பதில் அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தனமான இன்ஸ்டாகிராமில் கங்குலி மற்றும் அவரது மகளின் பதிவுகளை கண்ட ரசிகர்கள், அந்த செல்ல சண்டையை வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories