வைரல்

கொல்கத்தாவில் பணமழை பொழிந்த தனியார் நிறுவனம்: காரணம் இதுதான்! (வைரல் வீடியோ)

கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மாடியில் இருந்து பணத்தை மழைப்போல பொழிந்த வீடியோ வைரலாகியுள்ளது.  

கொல்கத்தாவில் பணமழை பொழிந்த தனியார் நிறுவனம்: காரணம் இதுதான்! (வைரல் வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் தனியார் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது. அதனையடுத்து அந்த நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் பணமழை பொழிந்த தனியார் நிறுவனம்: காரணம் இதுதான்! (வைரல் வீடியோ)

சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அந்நிறுவனத்தின் 6வது மாடியில் இருந்து பணத்தை கட்டுக்கட்டாக வீசியுள்ளனர். கீழே இருந்தவர்கள் இந்த பணப்பொழிவை பார்த்து திக்குமுக்காடி போயினர்.

கீழே விழுந்த பணத்தை ஆரவாரத்துடன் அள்ளி எடுத்தவர்களின் முகத்தின் இருந்த அளப்பரிய சிரிப்பை சில நொடிகளில் காவல்துறையினர் கலைத்தனர்.

கொல்கத்தாவில் பணமழை பொழிந்த தனியார் நிறுவனம்: காரணம் இதுதான்! (வைரல் வீடியோ)

பணக்கட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், சோதனைக்கு பயந்து அந்நிறுவனம் பதுக்கிய பணங்களை கீழே வீசியதா என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories