வைரல்

‘480 கி.மீ தொடர்ந்து பயணிக்கும் நாய்’ - ஏன்? எதற்கு? (VIRAL VIDEO)

சபரிமலைக்கு பாத யாத்திரையாகச் செல்லும் ஐயப்ப பக்தர்களுடன் நாய் ஒன்று சேர்ந்து பயணித்து வருவது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ஆந்திர மாநிலம் திருமலையிலிருந்து 13 பேரைக்கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 31ம் தேதி பயணத்தை தொடங்கிய அவர்கள் தற்போது கேரள மாநில எல்லையை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களுடன் நாய் ஒன்று சேர்ந்து பயணித்து வருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கூறுகையில், அந்த நாய் எங்களை பின்தொடர்ந்து வருவதை நாங்கள் முதலில் கவனிக்கவில்லை.

நீண்ட தூரம் பயணித்த பின்னும் அந்த நாய் எங்களை பயணித்து வந்தது. நாங்கள் சமைக்கும் உணவையே அதற்கும் வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தனர். பக்தர்களுடன் நாய் பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories