வைரல்

‘ரஷ்யாவில் பிகினி உடையில் வலம் வந்த ஆண்கள்’- ஏன் தெரியுமா?

ரஷ்யாவில் பல ஆண்கள் பிகினி உடையில் வலம் வந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

‘ரஷ்யாவில் பிகினி உடையில் வலம் வந்த ஆண்கள்’- ஏன் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரஷ்யாவின் சமாரா பகுதியில் ஒல்வி பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு விற்பனையை அதிகரிக்கும் யுத்தியாக, பிகினி உடையில் வருபவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என பெட்ரோல் பங் நிர்வாகம்அறிவித்தது.

இந்த அறிவிப்பு பெண்களுக்கு மட்டும் என்று சொல்லப்படவில்லை. பிகினி உடையில் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்கள் இந்த ஆஃபரை பயன்படுத்த பிகினி உடையணிந்து பெட்ரோல் பெற வந்தனர்.

ஆண்கள் அதிகளவில் பிகினியுடன் குவிந்ததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் இலவச பெட்ரோல் சலுகையை மூன்று மணி நேரமாக குறைத்தார்.

பிகினி உடையணிந்த ஆண்கள் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், #BikiniDress என்கிற ஹேஸ்டேகும் ட்விட்டரில் ட்ரெண்டானது.

banner

Related Stories

Related Stories