வைரல்

அம்மாவிற்கு மறுமணம்! மகளின் ட்விட்டர் பதிவிற்கு குவியும் பாராட்டுக்கள்!

இளம் பெண் ஒருவர் தனது அம்மாவிற்கு துணை தேவை என்பதை ட்விட்டரில் பகிர்ந்த செய்தி பெரும் வரவேற்றபை பெற்றுள்ளது.

அம்மாவிற்கு மறுமணம்! மகளின் ட்விட்டர் பதிவிற்கு குவியும் பாராட்டுக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் நவீனம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதீதி அளவிற்கு வளர்ந்துவிட்டது. ஆனாலும், இந்திய தேசத்தில் சாதி, மத ஆண்- பெண் ஏற்றதாழ்வுகள் போன்ற பிரச்சனைகள் முடிவுறாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஆண்கள் எளிதாக செய்யக்கூடிய மறுமணம், பெண்களுக்கு இன்னும் சிரமமாகவே உள்ளது.

இதுபோல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

தனது அம்மாவிற்கு துணை தேவை என்பதை ட்விட்டரில் இளம் பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். சட்டக் கல்லூரியில் படித்துவரும் அஸ்தா வர்மா என்ற அந்த மாணவி, கடந்த அக்டோபர் 31-ம் தேதி ட்விட்டரில், “என்னுடைய அம்மாவிற்கு 50 வயதுடைய அழகான ஆண் துணையை தேடுகிறோம். சைவம், குடிப்பழக்கம் இல்லாதவர், நல்ல நிலையில் இருக்கவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவிற்கும், தனிமையில் இருக்கும் அம்மாவிற்காக அவர் எடுத்த இந்த முயற்ச்சிக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. மறுமணத்துக்கு வயது வரம்பு தேவையற்றது என்பதை இந்த பதிவு காட்டுவதாக ட்விட்டரில் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதேப்போல், இந்த பதிவு பழக்கத்தில் வைத்திருக்கும் பழைய நடைமுறைகளை மறுஆய்வு செய்யவும் தூண்டுகிறது. நமது வீட்டிலும் கேட்காமல் - கேட்கப்படாமல் இருக்கும் மறுமணங்களை நடத்த நாம் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories