வைரல்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் சுற்றுலா வழிகாட்டி - வைரலாகும் டான்ஸ் வீடியோ!

தமிழக சுற்றுலா வழிகாட்டி ஒருவர், தனது அசாத்திய திறமையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் சுற்றுலா வழிகாட்டி - வைரலாகும் டான்ஸ் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுற்றுலா வழிகாட்டி ஒருவர், தனது அசாத்திய திறமையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான பிரபு என்பவர், தொன்மையாக கோவில் ஒன்றிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுகாப் பயணிகளுக்கு தமிழக பழங்கலாச்சாரத்தை விவரிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

பிரபு, அவர் ஜீன்ஸ் படத்தின் ‘கண்ணோடு காண்பதெல்லாம்...’ என்ற பாடலோடு தொடங்குகிறார். பின் பரதநாட்டியக் கலை நடனத்தின் பாவங்களை அழகாக விளக்குகிறார். மயில், பூ, கிளி, கடவுள் முத்திரைகளை தொடர்ச்சியாக செய்து காட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அசர வைத்துள்ளார்.

இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரியங்கா சுக்லா, தனக்கு வாட்ஸ்-அப்பில் வந்ததாகக் குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரின் பெயரை பிரபு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இடத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபுவின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திறமையானவர்களை அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சிறப்பாகப் பங்காற்றுகின்றன. கொல்கத்தா ரயில் நிலையத்தில் பாடித்திரிந்த ரானு மண்டல் இப்போது பாலிவுட்டில் அசத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்றவ்பரான திருமூர்த்தி, தனது சிறப்பான குரல்வளத்தால், தற்போது சினிமாவில் பாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இப்படி, சமூக ஊடகங்களின் வழியாக பல திறமையாளர்கள் கவனம் பெற்று வருவது சிறப்புக்குரியது.

banner

Related Stories

Related Stories