வைரல்

உடல் எடையை குறைப்பது எது? உணவு முறையா? லைஃப்ஸ்டைல் டெக்னிக்கா? : சரியான ஃபார்முலா என்ன?

உடல் எடையை குறைப்பது எது? உணவு முறையா? லைஃப்ஸ்டைல் டெக்னிக்கா? : சரியான ஃபார்முலா என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடல் எடையை குறைப்பது பற்றி எங்கு திரும்பினாலும் அட்வைஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. உடல் எடை குறைப்பை முன்னிட்டு டிவி ஷோவே செய்கின்ற அளவுக்கு இது ஒரு வளர்ந்து வரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம் என்று கூகுள் செய்கிறார்கள். ஆக, சாப்பிடுவது மட்டுமே குறிக்கோளாக உள்ளது. எதை சாப்பிடலாம் என்று தேடுவதை விட்டுவிட்டு 'என்ன செய்யலாம்' என உங்கள் முயற்சியை தொடங்குங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

உணவு முறை:

காலை உணவு ராஜா போல, மதியம் இளவரசன் போல, இரவு பிச்சைக்காரன் போல சாப்பிட வேண்டும் என்பது முதல் விதி. காலையில் 9 மணிக்குள், மதியம் 2 மணிக்குள், இரவு 8 மணிக்குள் சாப்பிட்டிருக்க வேண்டும். இரவு உணவு, இட்லி, ஆப்பம், இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளாக இருப்பது நல்லது. சப்பாத்தி கூடவே கூடாது.

தண்ணீரின் பங்கு:

உடல் எடை குறைப்புக்கு தண்ணீர் குடிப்பதே பெரிய பங்கு. அதுவும் இளஞ்சூடான நீர், கொழுப்பை கரைக்கும். கொள்ளு சூப், கொள்ளு சுண்டல், கொள்ளு ரசம், துவையல் என செய்து சாப்பிடலாம். வாரம் இருமுறை மட்டும். அதிகம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு சூடு. 4-5 அன்னாசி பழத் துண்டுகளை, வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட பலன் தெரியும். இதனுடன் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

சரியான அளவு தூக்கம்:

நடைப்பயிற்சி, வீட்டிலே சைக்கிள் மிதிப்பது, 8 வடிவ வாக்கிங் முறை, நீச்சல் போன்றவை பலன் தரும். இதனுடன் நேரத்துக்கு தூங்குவது, 8 மணி நேர தூக்கம் இருப்பது அவசியம். போர் அடிக்கும் போது சாப்பிடும் பழக்கத்தை கட்டாயம் கைவிடுங்கள். பசி வந்து சாப்பிடுவதே சரி. நொறுக்குத்தீனியை ஆரோக்கியமாக மாற்றலாம். சமோசாவுக்கு பதிலாக சாலட், சாக்லேட்டுக்கு பதிலாக கடலைமிட்டாய், ஐஸ்கிரீமுக்கு பதிலாக யோகர்ட், காபி, டீக்கு பதிலாக கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்

மேலே கூறிய முயற்சிகள் அனைத்தையும் செய்தாலும், மகிழ்ச்சியான மன நிலை இல்லை என்றால், இதன் பலன் கேள்விக் குறியே. உங்களின் ஸ்ட்ரெஸ் உங்களது எடையை கூட்டும். இதில் மாற்று கருத்தே இல்லை. மகிழ்ச்சியான மனநிலையில் இருந்து உங்களது வாழ்வியலை சரியாக திட்டமிட்டு, மேலே குறிப்பிட்டுள்ள அணுகுமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினாலே மாற்றம் தெரியும்… மிக விரைவில்.

banner

Related Stories

Related Stories