வைரல்

காஷ்மீர் மாணவிகளை பத்திரமாக வீடு கொண்டு போய் சேர்த்த சீக்கியர்கள் : இதுதான் இந்தியர்களின் சகோதரத்துவம் !

ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையால் வீடுகளில் தொடர்பு கொள்ள முடியாமல் புனேவில் தவித்த 32 காஷ்மீர் மாணவிகளை சீக்கியர்கள் பத்திரமாக அவர்களது வீட்டில் சேர்த்துள்ளனர்.

காஷ்மீர் மாணவிகளை பத்திரமாக வீடு கொண்டு போய் சேர்த்த சீக்கியர்கள் : இதுதான் இந்தியர்களின் சகோதரத்துவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆட்சி அதிகாரங்களை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு தேச மக்களின் நலன்களுக்கு எதிராக பா.ஜ.க தொடர்ச்சியாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது உண்மைதான் என நிரூபிக்கும் விதமாக ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்களை பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது.

மேலும் காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தைப் பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னதாக எந்த ஒருமுடிவையும் வெளிப்படையாக அறிவிக்காமல், மக்களை ஒடுக்கி அதன் பின்பு சட்டத்தை நிறைவேற்றியது.

இது மேலும் காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களைச் சிறைப் பிடித்து, தொலைத் தொடர்பு ரத்து, இணையச் சேவை ரத்து செய்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் முடக்கி வைத்துள்ளது. சொந்த மாநிலத்துக்குள்ளேயே மக்கள் அகதிகக வாழ பணிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படிக்கும் மாணவர்களும், வேலைபார்ப்பவர்களும் காஷ்மீரில் உள்ள தங்களது குடும்பங்களைத் தொடர்பு கொள்ளாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புனேவில் படித்து வந்த காஷ்மீர் மாணவிகளுக்கு சீக்கியர்கள் உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.

காஷ்மீர் மாணவிகளை பத்திரமாக வீடு கொண்டு போய் சேர்த்த சீக்கியர்கள் : இதுதான் இந்தியர்களின் சகோதரத்துவம் !

புனேவில் தங்கி படித்து வரும், 32 காஷ்மீர் மாணவிகள் தங்களது குடும்பத்தினரை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து அங்கிருந்த புனே சீக்கிய குருத்துவாரா கமிட்டியிடன் உதவிக் கேட்டுள்ளனர்.

அந்த குருத்துவாரா குழுவின் தலைவர் மாணவிகளின் நிலைமையை அறிந்து அவர்களைப் பாதுகாப்பாகக் காஷ்மீர் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து புனே குருத்துவாரா குழு மாணவிகளுக்கு டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து கொடுத்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள குருத்துவாரா குழுவிற்கு மாணவிகள் பற்றி தகவல் கொடுத்து மாணவிகளை வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து புனேவில் இருந்து மாணவிகளைப் பத்திரமாக டெல்லி அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளை வரவேற்று காஷ்மீர் அழைத்துச் செல்லும் பொறுப்பை டெல்லி குருத்துவாரா குழு ஏற்றது. டெல்லியில் இருந்து மாணவிகள் ஸ்ரீநகருக்கு விமானத்தில் மாணவிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பிற்காக சீக்கியர்கள் உடன் சென்றுள்ளனர்.

அங்கிருந்து காஷ்மீர் சென்றதும் ஒவ்வொரு மாணவியும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதே போன்று 32 மாணவிகளும் பாதுகாப்பாக அவரது வீட்டில் சேர்க்கப்பட்டனர். அதற்கு சில ராணுவ வீரர்களும் சீக்கியர்களுக்கு உதவி செய்தனர்.

மாணவிகளைப் பார்த்த பெற்றோர்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களை அழைத்து வந்த சீக்கியர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றியும் தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்துப் பாதுகாப்பாகப் பெண்களை அழைத்துச் சென்ற சீக்கியர்களுக்கும் அவர்களின் அமைப்புகளுக்கும் பலரும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்தியாவின் சகோதரத்துவம் இதுதான். இதை சிதைக்க நினைக்கும் யாரும் வெற்றி பெற்றுவிட முடியாது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories