வைரல்

“அகர முதல எழுத்தெல்லாம்”- கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் புகழ்பாடிய ஷேன் வாட்சன்! (வீடியோ)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை முன்பு திருக்குறளைச் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

“அகர முதல எழுத்தெல்லாம்”- கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் புகழ்பாடிய ஷேன் வாட்சன்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்) T20 தொடரின் போட்டிகளை தொகுத்து வழங்க தமிழகத்திற்கு வந்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றுலா சென்று வருகிறார்.

பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும், புகழ்மிக்க இடங்களுக்கும் சென்று சுற்றிப் பார்க்கும் அவர், கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற 133 அடி திருவள்ளூவர் சிலையினை பார்வையிட்டு மகிழ்ந்தார். பின்னர், திருவள்ளுவர் பெருமைகளை புகழ்ந்து பேசியும் , ’அகர முதல் எழுத்தெல்லாம்’ என்ற திருக்குறளின் முதல் குறளைச் கூறியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை டி.என்.பி.எல் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் தளமும், ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் பக்கங்களில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories