வைரல்

Pubg கேம் உங்கள் மெமரியை ஆக்கிரமிக்கிறதா? - இந்திய கேம் பிரியர்களுக்கென்றே Pubg புதிய அப்டேட்!

பப்ஜி கேமின் மெமரி அதிகமாக இருப்பதால் Uninstall-கள் அதிகரிக்கிறது. இந்த சிக்கலை தீர்க்க பப்ஜி லைட் வெர்ஷனை வெளியிடப்பட்டுள்ளது.

Pubg கேம் உங்கள் மெமரியை ஆக்கிரமிக்கிறதா? - இந்திய கேம் பிரியர்களுக்கென்றே Pubg புதிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மொபைல் கேமின் புரட்சியாக பார்க்கப்படுவது “ பப்ஜி” . பப்ஜி (PUBG) என்பது PLAYER UNKNOWN'S BATTLE GROUNDS என்பது பொருள் . அதாவது முகம்தெரியாத எதிரிகளுடன் களத்தில் சண்டையிட்டு ,இறுதி வரையில் தனிநபரோ அல்லது ஒரு குழுவோ நிலைத்து இருப்பதுதான் இந்த விளையாட்டின் விதிமுறை.

சாதாரண ஷீட்டிங் விளையாட்டிலிருந்து மாறுபட்டு, விளையாடும் பொழுது தனது குழு உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டே உரையாடலாம் என்பதுதான் இதன் வெற்றிக்கு பிரதான காரணம். Multiplayers அம்சத்துடன் பிரபல tencent games நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக அளவில் இதற்கான வரவேற்பு அதிகரிக்கவே , இந்த நிறுவனம் இதனை மெருகேற்றி பல புதிய புதிய வசதிகளையும் , விளையாடுபவர் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கொடுத்து வந்தது . வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க இதன் மெமரியின் அளவும் அதிகரிக்க தொடங்கியது . இதன் காரணமாக பயனாளர்கள் uninstall செய்வது அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு தீர்வளிக்கவும், அனைத்து வகை மொபைல் வைத்திருப்பவர்களுக்கு இந்த கேம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தற்பொழுது இந்தியாவில் “PUPG lite" பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் ’பப்ஜி மொபைலின்’ குறைந்த மெமரி அளவு கொண்ட பப்ஜியை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முன்பு 3 ஜி.பிக்கும் அதிகமான மெமரி அளவில் இருந்த நிலையில், இந்த புதிய பப்ஜி லைட் பதிப்பானது 2 ஜிபியாக இருக்கிறது.

இனி குறைந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்போன்களிலும் பப்ஜியை விளையாடலாம். இந்த புதிய அப்டேட் மெமரி நிமித்தமாக uninstall செய்த பயனாளர்களை மீண்டும் பப்ஜி பக்கம் திரும்ப வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories