வைரல்

2 வாழைப்பழம் 442 ரூபாய் :  ‘விஸ்வரூபம்’ வில்லனை உண்மையிலேயே வில்லனாக்கிய ஹோட்டல்! (வீடியோ)

பாலிவுட் நடிகர் ராகுல் நட்சத்திர விடுதி ஒன்றில் 2 வாழைப்பழத்திற்கு 442 ரூபாய் பில் கட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

2 வாழைப்பழம் 442 ரூபாய் :  ‘விஸ்வரூபம்’ வில்லனை உண்மையிலேயே வில்லனாக்கிய ஹோட்டல்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் நிறைய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சண்டிகரில் உள்ள ஜே டபிள்யூ என்ற நட்சத்திர விடுதியில் ராகுல் போஸ் தங்கியுள்ளார்.

அங்குள்ள உணவகத்தில் இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது வாழைப்பழத்திற்கு வந்த ‘பில்’லை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் போஸ் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர், ”நீங்கள் இதனை நம்பித்தான் ஆகவேண்டும். பழங்கள் உண்ண அதிக செலவாகாது என்று யார் சொன்னது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அந்த வீடியோவில் தான் கட்டிய ஹோட்டல் பில்லையும் காட்டியுள்ளார்.

அதில் அந்த நட்சத்திர விடுதி இரண்டு வாழைப்பழங்களுக்கு ரூபாய் 442.50 வசூலித்துள்ளது. மேலும், பில்லில் இரண்டு வாழைப்பழங்கள் எனக் குறிப்பிடாமல், பழத் தட்டு உணவு (Fruit Platter) என்கின்ற பெயரில் 375 ரூபாயும், மேலும் 18 சதவீத ஜி.எஸ்.டி சேர்த்து 67.50 ரூபாய் என மொத்தமாக ரூபாய் 442.50 வசூலித்துள்ளனர்.

அவரது பதிவின் பின்னூட்டங்களில் பலரும் அந்த உணவகத்தைக் கண்டித்துள்ளனர். மேலும் சிலர் தங்கத்தால் பூசப்பட்ட வாழைப்பழங்களை தந்திருப்பார்கள் என்றும், அங்கு பகல் கொள்ளை நடந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories