வைரல்

9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் 6 ஆயிரத்துக்கு விற்பனை : அமேசான் தவறால் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ‘லக்’

அமேசான் ப்ரைம் டே சேலில் விலையுயர்ந்த பொருட்களை சொற்ப விலைக்கு வாங்கியதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் 6 ஆயிரத்துக்கு விற்பனை : அமேசான் தவறால் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ‘லக்’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமேசானின் ப்ரைம் டே சேல் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் நடத்தப்படும். அதில், சில்லறை வணிகர்கள் வருடாந்திர தள்ளுபடி சமயத்திற்காக காத்திருந்து பொருட்களை வாங்கி விற்பது வழக்கம். இந்த ப்ரைம் டே விற்பனையில் சந்தாதாரர்களால் மட்டுமே பங்குகொள்ள முடியும்.

எக்கச்சக்கமான தள்ளுபடிகளை அளிக்கும் இந்த ப்ரைம் டே சேல் கடந்த ஜூலை 15 மற்றும் 16ம் தேதி நடத்தப்பட்டது. இருப்பினும் சில குளறுபடிகளால் அமேசானின் ப்ரைம் சேல் அந்நிறுவனத்துக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், ப்ரைம் சேலில் சுமார் 9 லட்சம் மதிப்புள்ள உயர்ரக நவீன வசதிகள் கொண்ட கேமரா லென்ஸ்கள் வெறும் 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இதனால் புகைப்பட ஆர்வலர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இதனையடுத்து கேமராக்களை வாங்குவதற்கு புகைப்பட ஆர்வலர்கள் அமேசான் ப்ரைம் டே சேல் நோக்கிப் படையெடுத்தனர்.

இதுகுறித்து உற்சாகமடைந்த வாடிக்கையாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் அதி விலையுயர்ந்த கேமரா சாதனங்களை ப்ரைம் டே சேலில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸுக்கு நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories