தமிழ்நாடு

சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!

சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காற்றுமாசு என்பது உலகளாவிய பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. காற்று மாசால் மூச்சுத் திணறல், இருதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. தலைநகர் டெல்லியில் கூட அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் எந்த வித தீவிர முயற்சியையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக அங்கு பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு குழந்தைகளுக்கு சுவாச பிரச்சினைக்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும், வழக்கறிஞர்கள் காணொளி காட்சி வாயிலாக வாதாடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் பாஜக அரசு இதனை ஒரு பெரிய விஷயமாக பார்க்காதது போலே தெரிகிறது.

சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!

இந்த சூழலில் சென்னையில் காற்றின் தரக்குறியீடு குறித்து மக்களே அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 100 இடங்களில் பொதுமக்கள் காற்றின் தரம் குறித்து தெரிந்துகொள்வதற்கான சென்சார் போர்டுகளை மாநகராட்சி அமைக்க உள்ளது. இதில்,சோதனை அடிப்படையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட நுழைவு வாயில் அருகே டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!

அதோடு பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறியும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தவும் மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.6.36 கோடி ஆகும். போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்படும்.

இந்த டிஜிட்டல் பலகைகளில் நாள்தோறும் காற்றில் உள்ள தூசுகள், நாசகார வாயுக்களின் விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும்.

பிப்ரவரி மாத இறுதிக்குள் டிஜிட்டல் பலகைகள் முழுமையாக அமைக்கப்பட்டுவிடும். சுற்றுச்சூழலை மாசில்லாமல் பாதுகாப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த டிஜிட்டல் பலகைகள் உதவியாக இருக்கும். சென்னை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories