வைரல்

Face App மூலம் உங்களின் வயதான தோற்றத்தை ரசித்து வருகிறீர்களா? : உங்கள் தகவல்கள் திருடப்படலாம்- எச்சரிக்கை

வைரலாகி வரும் ஃபேஸ் ஆப் பயனாளர்களின் சுய தரவுகள் திருடப்படுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Face App மூலம் உங்களின் வயதான தோற்றத்தை ரசித்து வருகிறீர்களா? : உங்கள் தகவல்கள் திருடப்படலாம்- எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீபகாலமாக சமூக வலைதளங்களை ஆதிக்கம் செய்து வருகின்றன Face App புகைப்படங்கள். எதிர்காலத்தில் ஒருவருடைய முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த ஃபேஸ் ஆப்பில் உள்ள ஃபில்டர் மூலம் காண்பிக்கப்படுகிறது.

இதனை பல்வேறு தரப்பினர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அதுதொடர்பான மீம்ஸ்களும் உலவி வருகின்றன.

Face App மூலம் உங்களின் வயதான தோற்றத்தை ரசித்து வருகிறீர்களா? : உங்கள் தகவல்கள் திருடப்படலாம்- எச்சரிக்கை

இந்நிலையில் Face App ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் ஸ்மார்ட்ஃபோன்களில் முடக்கப்பட்டுள்ளதாக பலர் ட்விட்டர் வாயிலாக புகார் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களிலும் டவுன்லோட் செய்யப்படுகிறது.

ஆனால், இந்த Face App பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளை உணராமல் சமூக வலைதளவாசிகள் இதனை பொழுதுபோக்கு என்கிற பேரில் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் ஆப் செயலி பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட் ஃபோன் கேலரியில் உள்ள புகைப்படங்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த Wireless Lab என்ற நிறுவனம் வடிவமைத்த செயலிதான் ஃபேஸ் ஆப். இது கடந்த 2017ம் ஆண்டே பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதே இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

தற்போது மீண்டும் இந்த ஃபேஸ் ஆப் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆப்பிள் ஐ ஸ்டோரில் இலவச செயலிகள் வரிசையில் முதலிடத்திலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் முதல் மூன்று இடங்களுக்குள்ளும் முன்னிலை வகிக்கிறது ஃபேஸ் ஆப். இருந்தாலும் அச்செயலி மீதான குற்றச்சாட்டு களையப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப செய்தியாளர் ஸ்காட் பட்மேன் என்பவர், ஃபேஸ் ஆப் நமது அந்தரங்க தரவுகளை திருடுவதாகவும், நமக்கு தெரிவிக்காத வகையில் தரவுகள் திருடப்படுவதாகவும் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியர்களின் ஆண்ட்ராய்டு பயனாளர்களின் ஃபேஸ் ஆப்பில், "Something went wrong, Please try again" என்றும், ஐஃபோன் பயனாளர்களின் ஃபேஸ் ஆப்பில் "ApiRequestError error 6 - Operation couldn't be completed" என்றும் வருகிறது என பலர் ட்விட்டர், ஃபேஸ்ப்புக்கில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் ஃபேஸ் ஆப் பயனாளர்கள் தங்களது சுயதரவுகள் திருடப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பிரைவசி பாலிசிகளில் குறைபாடுகள் உள்ள ஃபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories