வைரல்

வாகன சோதனையின் போது போலீசார் அத்துமீறல் : லத்தியால் தாக்கி பெண்ணின் மண்டையை உடைத்த போலீஸ்! (வீடியோ)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனச் சோதனையின் போது லத்தியால் போலீசார் தாக்கியதில் பெண்ணின் மண்டை உடைந்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் துரத்தியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி வெள்ளூர். மற்றும் இவரது மனைவி மாரிக்கண்ணு. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினர்.

நயினார்கோயில் ரிங் ரோட்டில் சென்றபோது, பஜார் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்த வெள்ளூரை போலீசார் நிறுத்துமாறு கூறினர். டூவீலரை நிறுத்த முயன்றபோது அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கியுள்ளார். மாரிக்கண்ணு தலையில் அடிபட்டு மண்டை உடைந்தது.

மயங்கி விழுந்த மாரிக்கண்ணுவை கணவருடன் ஆட்டோவில் ஏற்றி போலீசார் அனுப்பினர். ஆட்டோ டிரைவர் மருத்துவமனைக்கு செல்லாமல் நேரடியாக எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த போலீசார், "தலையில் அடிபட்டால் இங்கு ஏன் வந்தீர்கள்" எனக் கேட்டு ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் வேறு ஆட்டோவில் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பிறகே, போலீசார் தாக்கியதில் தான் மாரிக்கண்ணு காயம் அடைந்தார் என்ற தகவல் மற்ற போலீசாருக்குத் தெரிந்தது. இதையடுத்து, டி.பிளாக் அருகே சென்றபோது அப்பகுதியில் நின்றிருந்த போலீசார் ஆட்டோவை நிறுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரிக்கண்ணுவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளதாக வெள்ளூர் தெரிவித்தார்.

வாகனச் சோதனையில் போலீசார் மாரிக்கண்ணுவை தாக்கியபோது, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் சேர்த்தால் விஷயம் பெரியதாகி விடும் என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா கூறும்போது, ‘‘போலீசார் மாரிக்கண்ணுவை தாக்கிய சம்பவம் பற்றி விசாரணை நடத்த டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளேன். வாகனச் சோதனையின் போது போலீசார் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

banner

Related Stories

Related Stories