வைரல்

‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டுமாம்: ஆர்.எஸ்.எஸ்-காரர் மோடிக்கு கடிதம்!

‘டிக்-டாக்’ ஆகிய செயலிகளில், நம் தேசத்துக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. எனவே டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்என பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்-காரர் கடிதம் எழுதியுள்ளார்.

‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டுமாம்: ஆர்.எஸ்.எஸ்-காரர் மோடிக்கு கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. டிக் டாக் எனும் சமூக வலைதள செயலி மூலம் பலர் வீடியோக்களை வெளியிட்டு பொழுதுபோக்காகவும், தங்களது திறமைகளை வெளிகாட்டியும் வருகின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள். இந்த டிக்-டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், சில நிபந்தனைகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில், ‘டிக்-டாக்’ விதிக்க தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு இயக்கமான சுதேசி ஜக்ரான் மஞ்ச்ன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, ", ‘டிக்-டாக்’, ‘ஹலோ’ ஆகிய செயலிகளில், நம் தேசத்துக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ‘டிக்-டாக்’ மற்றும் ‘ஹலோ’ உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன.

எனவே நமது தேச பாதுகாப்பை, பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி இதுபோன்ற செயலிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சினர் ‘டிக்-டாக்’ செயலியை தடைவித்தக்க கோரினாலும் நாளும் நாள் அதனைப் பயன்படுத்தி வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories