வைரல்

தயிருக்கு ஜி.எஸ்.டியா? 4ரூ கேட்டு 15,000ரூ அபராதம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஓட்டல்!

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராத பொருளுக்கு வரி வசூலித்த ஓட்டல் உரிமையாளருக்கு 15 ஆயிரத்து 4 ரூபாயை அபராதமாக விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்.

தயிருக்கு ஜி.எஸ்.டியா? 4ரூ கேட்டு 15,000ரூ அபராதம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஓட்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் (ஜி.எஸ்.டி) பால், காய்கறிகள், பச்சை மாமிசம் போன்ற உணவுப்பொருட்களுக்கு வரி செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் நெல்லையில் தயிருக்கு ஜி.எஸ்.டி. வசூலித்த ஓட்டல் உரிமையாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் விதித்த தண்டனை அபாரம்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த மகாராஜன் என்பவர், அருகில் உள்ள அன்னபூர்ணா என்ற உணவகத்தில் 40 ரூபாய்க்கு தயிர் வாங்கியுள்ளார். அதை பார்சல் செய்ததற்கு 2 ரூபாயும், ஜி.எஸ்.டிக்கு 2 ரூபாய் என மொத்தம் 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரம்புக்குள் வராத தயிருக்கு எதற்கு வரி வசூலிக்கிறீர்கள் என மகாராஜன் கேள்வி எழுப்பியதற்கு முடிந்தால் வாங்குங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் என ஓட்டல் நிர்வாகிகள் அலட்சியமாக பேசியுள்ளனர்.

தயிருக்கு ஜி.எஸ்.டியா? 4ரூ கேட்டு 15,000ரூ அபராதம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஓட்டல்!

இதனையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்துள்ளார் மகாராஜன். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜி.எஸ்.டிக்குள் வராத பொருட்களுக்கு வரி வசூலிப்பது சட்டப்படி குற்றம் என கண்டித்து அபராதமாக ரூ.10 ஆயிரமும், மனுதாரரின் வழக்கு செலவினங்களுக்கு ரூ.5 ஆயிரமும் ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும் எனவும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடிய போது, வரி வரம்பில் வராத பொருளுக்கு ஜி.எஸ்.டி போட்டது மட்டுமில்லாமல் பார்சல் சார்ஜ் என்ற பெயரில் 2 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாங்கிய தயிருக்கு கூடுதலாக வசூல் செய்யப்பட்ட நான்கு ரூபாயுடன் சேர்த்து 15 ஆயிரத்து நான்கு ரூபாயக மனுதாரருக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.

ஜி.எஸ்.டி குறித்து வணிகர்களுக்கு முறையான ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கப்படாததே இதுபோன்ற கட்டண வசூலுக்கு காரணமாக அமைகிறது. எனவே, இனிமேலாவது வணிகர்களிடையே ஜி.எஸ்.டி. குறித்த முறையான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories