வைரல்

ஃபேஸ்புக், வாட்சப்பில் போட்டோ டவுன்லோட் செய்வதில் சிக்கல் : பொதுமக்கள் அவதி !

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியாததால் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர். 

File image : Social Media
File image : Social Media
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களின்றி நம்மால் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான புகைப்படங்கள் பதிவேற்றம், தரவிறக்கம் செய்யப்படுகிறது. இதில் பேஸ்புக் மட்டுமில்லாது பேஸ்புக் நிறுவன குழுமத்தில் உள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்நிலையில், இன்று மாலையில் இருந்து திடீரென ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களை பாதித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்துள்ளது என்று சொல்லப்பட்டாலும், இதுகுறித்து பேஸ்புக் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

banner

Related Stories

Related Stories