வைரல்

ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வருமானம் ஈட்டும் சமோசா வியாபாரி... மோப்பம் பிடித்த வணிக வரித்துறை!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள சமோசா, கச்சோரி விற்கும் வியாபாரிக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது. 

ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வருமானம் ஈட்டும் சமோசா வியாபாரி... மோப்பம் பிடித்த வணிக வரித்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தின் அலிகாரில் உள்ள சீமா தியேட்டர் அருகே உள்ளது சமோசா மற்றும் கச்சோரி விற்கும் கடை. இதன் உரிமையாளர் முகேஷ். இவர், கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சமோசா, கச்சோரி விற்பனை செய்து வருகிறார். வெறும் 225 சதுர அடியில் உள்ள அவரது வீட்டிலேயே கச்சோரிகளை செய்து விற்று வருகிறார் முகேஷ்.

காலை தொடங்கி நாள் முழுவதும் முகேஷின் கச்சோரிக்கு வரவேற்பு அதிகம் என்பதால் மக்களின் வரவு என்றும் ஈ மொய்ப்பது போல் அதிகரித்தே வந்தது. ஒருமுறை முகேஷின் கச்சோரியை ருசித்துவிட்டால் போதும் தொடர்ந்து அவரது கடைக்கு விசிட் செய்யாமல் கடக்கமுடியாத அளவுக்கு முகேஷ் தனது கச்சோரியில் சொக்குப்பொடி போட்டு வைத்துள்ளார் போலும்.

ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வருமானம் ஈட்டும் சமோசா வியாபாரி... மோப்பம் பிடித்த வணிக வரித்துறை!

எல்லாம் நல்லபடியாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. முகேஷின் கடைக்கு வரும் கூட்டத்தை கண்டு கண்டிப்பாக அதிக வருமானம் ஈட்டுபவராகத்தான் இருக்கக்கூடும் என சந்தேகித்து வணிக வரித்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, முகேஷின் சமோசா கடையை நோட்டமிட்ட வருமான வரித்துறையினர் ஒரு நாளைக்கு இவ்வளவு கூட்டம் வரும் போது கட்டாயம் ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி வரை வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது என கணித்து முகேஷுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். மேலும் தனது கச்சோரி கடையை முகேஷ் பதிவு செய்யவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வருமானம் ஈட்டும் சமோசா வியாபாரி... மோப்பம் பிடித்த வணிக வரித்துறை!

இது குறித்து பேசிய முகேஷ், இது போன்ற சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும், 12 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்தி வருகிறேன் என்றும் கூறினார். மேலும், இப்படி ஒரு விதிமுறை இருப்பது பற்றி எனக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை என்று அப்பாவியாகப் பேசியிருக்கிறார்.

பின்னர், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது கட்டாயம் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்த ஓராண்டுக்கான ஜி.எஸ்.டி மற்றும் சமோசா, கச்சோரி செய்வதற்கான பொருட்களின் விவரங்களையும் ஜி.எஸ்.டி. புலானய்வு அதிகாரிகளின் அளித்திருக்கிறார் முகேஷ்.

banner

Related Stories

Related Stories