வைரல்

திருநங்கைகள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் : உ.பி-யில் தொடரும் அத்துமீறல்கள்! (வீடியோ)

உத்தர பிரதேச காவல் நிலையத்தில் திருநங்கைகளை போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரித்துள்ளனர்.

திருநங்கைகள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் : உ.பி-யில் தொடரும் அத்துமீறல்கள்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லால்குர்தி காவல் நிலையத்தில் திருநங்கைகள் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பம் நடைபெற்றுள்ளது. தடியடி நடத்தியது குறித்து தற்பொழுது தகவல் வெளிவந்துள்ளது. லால்குர்தி பகுதியில் திருநங்கைகளிடையே அடிக்கடி சண்டை நடப்பதாகவும் அந்த சண்டையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதாகவும் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இனி பிரச்சனைகள் நடக்காத வகையில் இருக்கவேண்டுமெனில் காவல் நிலையத்திற்கு வந்து தகவல் அளித்துவிட்டு மோதல் போக்கை முடித்துக்கொள்ளுமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் திருநங்கைகள் இடையே வாக்குவாதம் அதிகரித்து. இந்த வாக்குவாதத்தை சகித்துக்கொள்ளாமல் பிரச்சனையை முடித்து வைக்காமல் சம்பந்தப்பட்ட திருநங்கைகள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறுகின்றார்.

இந்த தடியடி சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"காவல் நிலைய வளாகத்தில் மோதலில் ஈடுபட்டதால் அதைக் கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டியதாக இருந்தது. மோதல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு சூப்பிரின்டென்ட் நிதின் திவாரி, இது குறித்து பேசுகையில், “காவல் நிலைய வளாகத்தில் மோதலில் ஈடுபட்டதால் அதைக் கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டியதாக இருந்தது. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார். இந்த சமூகத்தில் திருநங்ககைகள் பல ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமுகத்தினர் திருநங்கைகளை பாரபட்சமாக நடத்துகிறது. அவர்களின் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் பலசில நேரங்களில் பிறரிடம் கையேந்தும் நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் திருநங்கைகள் மீது நடத்தபட்டுள்ள தாக்குதல் மனித உரிமை மீறல் செயல். அவர்களை தூரத்தி அடிக்கும் அளவிற்கு குற்றம் செய்துள்ளார்களா? என்று சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories